மன்னார் வங்காலை பாடசாலை அதிபர் நியமனத்தில் உண்மையில் நடந்தது என்ன?
மன்னார் வங்காலை புனித.ஆனாள் மகாவித்தியாலய அதிபராக கடமையாற்றிய ஸ்பெல்வின் குரூஸ் ஓய்வு பெற்ற நிலையில் புதிய அதிபர் நியமனத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் தலையீடு காணப்படுவதாக சர்சை எழுந்திருந்தது
குறித்த நியமனத்தில் அரச அதிகாரம் துஸ்பிரியோகம் செய்யப்படவில்லை என்பதுடன் புதிய அதிபர் நியமனம் தொடர்பில் மன்.ஆனாள் பாடசாலை பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கம் உட்பட்ட சங்கங்களின் கோரிக்கையின் அடிப்படையிலேயே புதிய அதிபருக்கான பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளமைக்கான ஆதாரங்கள் எமது இணையத்திற்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது
அதே நேரம் வங்காலை ஆலய அபிவிருத்தி குழு ,கல்வி அபிவிருத்தி குழு,வங்காலை வடக்கு கிராம அபிவிருத்தி சங்கம்,வங்காலை விவசாய அமைப்பு,ஆனாள் நகர் கிராம அபிவிருத்தி சங்கம்,புனித ஆனாள் கலாமன்றம்,தோமஸ்புரி கிராம அபிவிருத்தி சங்கம்,கிராம அபிவிருத்தி சங்கம் இரத்தினபுரி(வங்காலை) ,வங்காலை கத்தோலிக்க இளையோர் ஒன்றியம்,வங்காலை மேற்கு அபிவிருத்தி சங்கம்,வங்காலை மேற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கம் உட்பட ஊர் பொது மக்கள் பலரின் கோரிக்கைக்கு அமைவாகவே திரு.ஸ்ரான்லி டிமேல் அவர்களை பாடசாலை அதிபராக நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமைக்கான ஆதாரங்கள் கிடைக்க பெற்றுள்ளது
குறித்த அதிபர் நியமனத்தில் அரச பதவி துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாகவோ அல்லது அரசாங்க அதிபர் சார்பாக அதிபர் நியமனத்தில் அழுத்தம் மேற்கொள்ளப்பட்டதாகவோ உறுதிப்படுத்தப்படவில்லை
தொடர்புடைய செய்தி
முறையற்ற அதிபர் நியமனம் : மன்னார் வங்காலை பாடசாலையில் எழுந்த புதிய சர்ச்சை !!
No comments:
Post a Comment