அண்மைய செய்திகள்

recent
-

விபத்தில் சிக்கிய இளங்குமரன் எம்.பியை சந்தித்த பிரதமர்

 விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனை பிரதமர் ஹரினி அமரசூரிய நேற்று  மாலை வைத்தியசாலையில் சந்தித்து நலன் விசாரித்துள்ளார். 


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்ற பிரதமர் ஹரினி அமரசூரிய இளங்குமரனின் உடல் நிலைமை தொடர்பில் வைத்தியர்களிடம் கேட்டறிந்து கொண்டார். 

இதன்போது கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் சிறீபவானந்தராஜா, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் பயணித்த கார் யாழ்ப்பாணம் தனங்கிளப்பு பகுதியில் விபத்துக்குள்ளானது. 

கிளிநொச்சியிலிருந்து பயணித்துக் கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனின் வாகனமானது சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தனங்கிளப்பு பகுதியில் பயணித்த சிறிய லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது. 

தலையில் பலத்த காயத்துக்குள்ளான நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.




விபத்தில் சிக்கிய இளங்குமரன் எம்.பியை சந்தித்த பிரதமர் Reviewed by Author on February 16, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.