பிரதமருடன் கலந்துரையாட சந்தர்ப்பம் தருவதாக தெரிவித்து தாங்கள் ஏமாற்றப்பட்டதாக கேப்பாப்புலவு மக்கள் விசனம்
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மக்கள் சந்திப்புக்காக இன்று விஜயம் மேற்கொண்ட நாட்டினுடைய பிரதமர் ஹரினி அமர சூரிய அவர்களுடன் கலந்துரையாடுவதற்கு தமது காணிகளை இராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ள கேப்பாப்புலவு பூர்வீக மக்களுக்கு கடத்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் ஊடாக நேரம் ஒதுக்கி தருவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டிருந்தது
அதற்கமைவாக இன்று ஒரு மணிக்கு வருகை தருமாறும் பிரதமர் அவர்களோடு கலந்துரையாடுவதற்கு நேரம் தருவதாகவும் தெரிவிக்கப்பட்டதாக கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர்
தாம் ஏற்கனவே தேர்தல் காலத்தில் புதுக் குடியிருப்புக்கு வருகை தந்த பிரதமரிடம் தனது காணி விடுவிப்பு தொடர்பில் மகஜகர்களை கையளித்ததாகவும் இது தொடர்பில் நேரடியாக கலந்துரையாடுவதற்கு இன்றைய தினம் வருகை தந்த போதும் கலந்துரையாடலில் தமக்கு நேரம் வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் வருகை தந்து உரையை நிகழ்த்தி விட்டு சென்று விட்டதாகவும் தாம் ஏமாத்தப்பட்டுள்ளதாகவும் கேப்பாப்புலவு மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்
இன்றைய பிரதமரின் நிகழ்வு நிறைவடைந்ததன் பின்னர் முல்லைத்தீவு ஊடக அமையத்துக்கு வருகை தந்த கேப்பாப்புலவு கிராமத்தைச் சேர்ந்த குறித்த நபர் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி இதனை தெரிவித்தார்

No comments:
Post a Comment